ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இந்தியா பயணமாகியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான குழுவில் வெளிவிவகார அமைச்சருடன் மேலும் அரசியல் பிரமுகர்கள் சிலரும் பயணமானதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான பிரத்தியேக விமானமொன்றில் இந்தக் குழுவினர் பயணமாகியுள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழகம் முழுவதும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’