-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 28 மார்ச், 2013
வெள்ளி, 15 மார்ச், 2013
சர்வகட்சி மாநாட்டு கோரிக்கையை ஆதரிக்க முடியாது; ரணிலிடம் மனோ தெரிவிப்பு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக உடனடியாக ஒரு புதிய சர்வகட்சி மாநாட்டை அரசாங்கம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையை ஏற்றுகொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சனி, 23 பிப்ரவரி, 2013
சனி, 9 பிப்ரவரி, 2013
அரசாங்கம் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்: மனோ
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகம் இன்று கட்சி பேதம் இல்லாமல் எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதான எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், நெடுமாறன், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இலங்கை ஜனாதிபதிக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக கடும் எதிர்ப்புகளை முன்னெடுக்கின்றனர்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
பரிந்துரைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன: மனோ
ஐ .நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அளித்த உறுதிமொழிகளின் பிரகாரம் கற்றுக்கொண்ட ஆணைக்குழு செய்துள்ள சிபாரிசுகளை முறையாக நிறைவேற்றி வருகிறோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகத்துக்கு சொல்லி வருகிறார். இப்போதும் இதற்காகவே இங்கிலாந்துக்கு ஓடோடி போயுள்ளார். இந்நிலையில்தான், யாழ்.தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது புத்தூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதன், 30 ஜனவரி, 2013
தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை: மனோ
தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக இருக்கிறது. 'ஸ்ரீ லங்கா தாயே' என தொடங்கும் தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது 'ஸ்ரீ லங்கா' என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புதன், 19 டிசம்பர், 2012
கோட்டாபய நாளுக்கு நாள் புதுப்புது அவதாரங்கள் எடுக்கிறார்: மனோ
குடும்பங்களுடன் வாழ்ந்து வந்த மாணவர்களை பிடித்து வந்து புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது இந்த அரசாங்கம். இந்த நடவடிக்கைக்கு காரணம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
புதன், 21 நவம்பர், 2012
தமிழ் பெண்களை இராணுவத்தில் இணைக்காது தமிழர்களை பொலிஸில் இணையுங்கள்: மனோ
கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளின் பிரகாரம் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க சொல்கிறது. ஆதலால் இராணுவத்தில் நமது பெண்களை இணைப்பதை நிறுத்தி தமிழர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணையுங்கள். இதன்மூலம்தான் உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வியாழன், 1 நவம்பர், 2012
புதன், 31 அக்டோபர், 2012
குற்றப் பிரேரணையில் கையெழுத்திடுவோர் அதிகார பகிர்விற்கு எதிரானவர்கள்: மனோ
நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு திவிநெகும என்ற சட்டமூலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சட்டமூலம் 13ஆம் திருத்தத்தை வலுவிழக்க செய்யும் நோக்கத்தை கொண்டது. எனவே பிரதம நீதியசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான அரசாங்கத்தின் குற்றப் பிரேரணையில் கையெழுத்து இடுகின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகார பகிர்விற்கு எதிரானவர்கள்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
திங்கள், 15 அக்டோபர், 2012
சட்டத்தில் உள்ள உரிமைகளுக்குகூட கோத்தபாய தடை போடுகிறார் : மனோ கணேசன்
அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள 13ம் திருத்தத்தை தமிழர்கள் அனுபவிக்க தடை போடுவதன்மூலம், அரசாங்க ஊழியரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது வரம்பை மீறி பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், நேற்று இரவு லண்டன் பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
சனி, 13 அக்டோபர், 2012
ஹெல உறுமயவின் அதுரலியே ரத்தின தேரர் எம்.பி.யிடம், அரசு சார்பு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும் :- மனோ கணேசன்
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
திங்கள், 25 ஜூன், 2012
தீர்வில் பங்கு கோரும் முஸ்லிம் தலைவர்கள் போராட்டத்திலும் பங்கு பெற வேண்டும் : மனோ
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும். அத்துடன் தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சனி, 23 ஜூன், 2012
தமிழினிக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு ஏனைய கைதிகளுக்கும் வழங்கப்படுவதில் என்ன தடை? : மனோ
மூ ன்று வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த, புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினியை, புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றும்படி, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கபுலி தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், புனர்வாழ்வு பெற்றுக்கொள்வது தொடர்பில், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினியிடம், இது தொடர்பான அவரது ஒப்புதலை பெறும்படி நீதவான் பணித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களமும் தமிழினி சிறையில் இருந்து புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்படுவதை ஆட்சேபிக்க வில்லை. இந்தத் தீர்ப்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக்கையை மக்கள் கண்காணிப்புக் குழு ஏற்பாட்டாளர் என்ற முறையில் நான் வரவேற்கின்றேன். ஆனால் தமிழினிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பம் ஏன் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படவில்லை என்று நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வியாழன், 15 மார்ச், 2012
செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
"சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டும் நல்லிணக்க அரசியல் அடையாளம் என்ன?"
ஜெ'னீவாவிற்கு போகாமல் கூட்டமைப்பு தலைவர் அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டியுள்ளார். இதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் கூட்டமைப்பு தலைவருக்கு காட்டும் நல்லெண்ண அரசியல் அடையாளம் என்ன? இதுவே இன்று தமிழ் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்ற கேள்வி' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
திங்கள், 20 பிப்ரவரி, 2012
உரிமை கோரும் ஜனநாயக போராட்டம் நடத்த வடபகுதி மக்கள் தயார்: மனோ
யாழ், கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்கள் தம்மை வளைத்து போடுவதற்காக தம்மை நோக்கி நீட்டப்படும் சலுகை கரங்களை நிராகரிகின்றார்கள். அதேவேளை தமிழ் தேசிய அரசியல் அபிலாஷைகளையும், அன்றாட வாழ்வாதார தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் தெளிவு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். இதன் காரணமாக, தமது உரிமைகளுக்கான சாத்வீக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க வடபகுதி தமிழ் மக்கள் இன்று தயார்நிலையில் இருக்கின்றார்கள். இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கான மனோதிடம் எனது வடபகுதி உடன் பிறப்புகளிடம் நிலைகொண்டிருப்பது என்னை வசீகரிகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
திங்கள், 10 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















.jpg)




