வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
விமல் வீரவன்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமல் வீரவன்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 அக்டோபர், 2012

மஞ்சுள திலகரட்ண மீதான தாக்குதலின் பின்னணியில் புலிகள்: விமல் வீரவன்ச



நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி, மோதல்களை ஏற்படுத்த புலிகள் முயற்சிக்கின்றனர். சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலின் பின்னணியிலும் சர்வதேச சூழ்ச்சிக்காரர்களும் புலிகளுமே உள்ளனர் ௭ன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வியாழன், 24 மே, 2012

பொன்சேகா வாயை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து : விமல்



ள்நாட்டு யுத்தம் தொடர்பாக சரத் பொன்சேகா வாயை திறந்தால் நாட்டிற்கு ஆபத்தாகவே முடியும். போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைச் சூழலை அரசாங்கம் தகர்த்தெரிந்து விட வேண்டும் என்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சனி, 3 மார்ச், 2012

ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிடினும் விசாரிக்கலாம்: அமைச்சர் விமல்


லங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய மேலும் மூன்று வழிமுறைகள் சர்வதேசத்திடம் உள்ளன. எனவே சர்வதேச விசாரணைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களால் மாத்திரமே முடியும் என்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விமல் வீரவன்ச அறிவிப்பு

ஐநா சபையின் கொழும்பு அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கைகளில் இறங்குமிடத்து தாமும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

திங்கள், 5 ஜூலை, 2010

ஐ.நா கிளை அலுவலகம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - விமல் வீரவன்ச

ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளையை முற்றுகையிட்டு பணியாளர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென கடந்த வாரம் தாம் வெளியிட்ட கருத்தில் மாற்றமில்லை என சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

செவ்வாய், 16 மார்ச், 2010

அமெரி்க்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை குற்றங்களை வாபஸ் பெற கோருகிறார் வீரவன்ச

அமெக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2009 ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் இலங்கை குறித்து விடயங்களை வாபஸ்பெற வேண்டும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று

செவ்வாய், 9 மார்ச், 2010

இலங்கை போர்க்குற்ற விசாரணையை நடத்த முன் ஆப்கானிஸ்தான் நிலைமையை விசாரிக்கவேண்டும்: விமல் வீரவன்ச






இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினரும், நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட மற்றும் மேற்கொண்டு வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

தேசிய சுதந்திர முன்னணி பொதுத் தேர்தலில் 16 மாவட்டங்களில் போட்டி


விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஐ. ம. சு. மு. அணியில் 16 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அதில் தேசிய பட்டியல் இருவரில் முன்னாள் எம். பி., எம். முஸம்மிலின் பெயரையும் சிபார்சு செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ச போட்டியிடுகிறார். ஏனையோர் பற்றிய விபரங்கள் வருமாறு:

கம்பஹா - பியசிறி விஜேய நாயக்க, அன்ஜான் உம்மா, களுத்துறை – ஜயந்த சமரவீர, மாத்தறை - சரத் வீரவன்ச, ஹம்பாந்தோட்டை - த மசேன கொடித்துவக்கு, மொனறாகலை – பத்ம உதயகாந்த குணசேகர, கேகாலை – புத்தாச ஹினாராச்சி, மாத்தளை - அரவிந்த வன்னியாராச்சி, கண்டி – நிமல் பேமவன்ச, நுவரெலியா - நிமல் பியதிஸ்ஸ, அனுராதபுரம் – வீரகுமார திசாநாயக்க, பொலன்நறுவை – ராஜா ரன்ஜித் குணரத்ன, குருநாகலை - சேனாரத்தின சில்வா, புத்தளம் - சமன்சிரி ஹேரத், இரத்தினபுரி – தீபால் குணசேகர, அம்பாறை - அனுர முனசிங்க. __

புதன், 10 பிப்ரவரி, 2010

இராணுவ விடயங்கள் தொடர்பில் டில்வின் சில்வாவும் விசாரிக்கப்பட வேண்டும்: விமல் வீரவன்ச


ஜெனரல் சரத் பொன்சேகா முப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பொன்சேகா மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் டில்வின் சில்வாவும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தொரிவித்தார்.

“ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றால் தான் விரும்பாத அரச உத்தியோகத்தர்களை 24 முதல் 72 மணித்தியாலங்களுக்குள் கடமையிலிருந்து இடைநிறுத்த உத்தேசித்திருந்தார்.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது டில்வின் சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன் அந்த உரையாடல் தொடர்பான முழு விபரங்களை நாம் வைத்திருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சனி, 16 ஜனவரி, 2010

மக்கள் பிரதிநிதிகள் விலைகொடுத்து வாங்கப்படுவதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு


மக்கள் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் விலைகொடுத்து வாங்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியினர் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் குழுவினர் தனக்கு பணம் வழங்கியதாக குறிப்பிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில், அது தொடர்பாக ஆதாரம் இருப்பதாகக் கூறி இறுவட்டுகளையும் ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டின்போது வழங்கினார்.

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில் இடையில் அங்கிருந்து சென்றார்.

அதன் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியினர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சனி, 9 ஜனவரி, 2010

ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றால் பிரபாகரன் மீண்டும் உயிர்பெறுவார்-வீரவன்ச தெரிவிப்பு;


ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுமாயின் மரணித்த புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர் பெறும் நிலையே உருவாகும். எனவே, மேலதிகமான இரண்டு இலட்சம் வாக்குகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்..
புலிகள் இயக்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்ட அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவினை வெற்றி பெற வைப்பதற்கு பாரியளவு நிதியினை செலவிட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்றப் போதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்ததன் மூலம் தேசத் துரோக கும்பல் தனது பரிபூரண நிலையை அடைந்துள்ளது. பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள் என்பனவற்றை வடக்கிலிருந்து முற்றாக அகற்றல், சுயாட்சியை ஏற்படுத்தல்,வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்தல், சிறையில் உள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உட்பட பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஜெனரல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ளார்..
இதனையே பிரபாகரனுடன் இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் செய்தார். தற்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் மேற்கொள்ள உள்ள காட்டிக் கொடுப்பை போல இலங்கை அரசியல் வரலாற்றில் வேறொரு சந்தர்ப்பம் அமைந்திருக்காது. புலிகள் இயக்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய இன்று ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட்டு வருகின்றார். இதற்கு சர்வதேச நாடுகள் பின்னணியில் நின்று செயற்படுகின்றன. புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்களில் ஒருவரான ருத்திரகுமார் 2010 ஆம் ஆண்டுக்கான வருட வாழ்த்து செய்தியில் தமது போராட்டம் வேறு வழியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். தேசப்பற்றை வாய் நிறைய பேசும் ஜே.வி.பி. இன்று புலிகளின் தேவையை பூர்த்தி செய்ய ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கி வருகின்றது. எனவே எதிர்வரும் 26 ஆம் திகதி தவறுதலாகக் கூட அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மருமகனின் ஆயுத நிறுவனம் குறித்து சரத் பொன்சேகா பகிரங்க விவாதம் மூலம் விளக்கமளிக்க வேண்டும்: விமல்


மருமகனின் ஆயுத நிறுவனத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, பகிரங்க விவாதமொன்றின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முடியுமென்றால் தமது கட்சியுடன் பகிரங்க விவாதமொன்றை நடத்துமாறு விமல் வீரவன்ச, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பகிரங்க விவாதமொன்றில் கலந்து கொள்ளக் கூடிய இயலுமை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் காணப்படாவிட்டால், அவரது பிரதிநிதிகளை இந்த விவாதத்திற்கு அனுப்பி வைக்குமாறு விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

இந்த விவாதம் இலங்கையின் சகல இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகவும் வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனம் எவ்வாறு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டது, கொடுக்கல் வாங்கல்களின் மூலம் எவ்வளவு பணம் திரட்டப்பட்டது போன்ற விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலத்திற்குள் தமது சவாலுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், சரத் பொன்சேகாவின் மருமகனுக்குச் சொந்தமான ஆயுத நிறுவனம் தொடர்பான தகவல்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 14 டிசம்பர், 2009

ஜெனரல் சரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விமல் வீரவன்ச தெரிவிப்பு


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

தமது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,

"நேற்று வெளியாகிய ஆங்கில வார இதழ் ஒன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புச் செயலாளர் மீது சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்க உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துறையாடப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

40 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்புப் படையில் சேவை புரிந்துள்ள அவர், இராணுவ சம்பிரதாயங்களை மீறிச் செயற்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றஞ்சுமத்தினார்.