-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 29 டிசம்பர், 2009
மருமகனின் ஆயுத நிறுவனம் குறித்து சரத் பொன்சேகா பகிரங்க விவாதம் மூலம் விளக்கமளிக்க வேண்டும்: விமல்
மருமகனின் ஆயுத நிறுவனத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, பகிரங்க விவாதமொன்றின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முடியுமென்றால் தமது கட்சியுடன் பகிரங்க விவாதமொன்றை நடத்துமாறு விமல் வீரவன்ச, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பகிரங்க விவாதமொன்றில் கலந்து கொள்ளக் கூடிய இயலுமை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் காணப்படாவிட்டால், அவரது பிரதிநிதிகளை இந்த விவாதத்திற்கு அனுப்பி வைக்குமாறு விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.
இந்த விவாதம் இலங்கையின் சகல இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகவும் வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனம் எவ்வாறு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டது, கொடுக்கல் வாங்கல்களின் மூலம் எவ்வளவு பணம் திரட்டப்பட்டது போன்ற விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வார காலத்திற்குள் தமது சவாலுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், சரத் பொன்சேகாவின் மருமகனுக்குச் சொந்தமான ஆயுத நிறுவனம் தொடர்பான தகவல்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’