ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளையை முற்றுகையிட்டு பணியாளர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென கடந்த வாரம் தாம் வெளியிட்ட கருத்தில் மாற்றமில்லை என சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நிபுணர்கள் குழு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் வரையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை உத்தியோகத்தர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென தாம் வெளியிட்ட கருத்து ஜே.என்.பி தலைவர் என்ற முறையிலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்காக எவரும் ஐக்கிய நாடுகளின் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினதும், படைவீரர்களினதும் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளும் பான் கீ மூனே மன்னிப்பு கோர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றில் இலங்கைத் தலைவர்களை ஆஜர்படுத்தும் முயற்சியின் முதல் படியே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விமல் வீரவன்சவின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மன்னிப்பு கோரக் கூடுமென ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பரான் ஹக் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’