வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஆப்பிரிக்கர்கள் கட்டிய இந்து ஆலயம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் இருக்கும் இந்துமத ஆலயம் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகிறது.
ஆலயத்திலுள்ள ஒரு மேடையில் இந்துமதக் கடவுள்களின் திருவுருவச் சிலைகளுக்கு வண்ணமயமான உடைகள் உடுத்தப்பட்டுள்ளன.
இந்துமதக் கடவுகளின் திருவுருவங்களுடன் ஏசுநாதரின் ஒரு படமும் வைக்கப்பட்டுள்ளது
கானாவின் தலைநகரில் இருக்கும் இந்த இந்துமத ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பூர்வகுடி ஆப்பிரிக்கர்கள்.
இந்த ஆலையத்துக்கு வரும் பக்தர்களுக்கு இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை, அவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்ததும் கிடையாது.
ஆனாலும் இந்துமதச் சட்டங்களையும், சடங்குகளையும் பாரம்பரிய இந்துமுறைப்படி அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் தாங்கள் இந்து மதத்துக்கு மாறியுள்ளதாகக் கூறுகிறார்கள்.
எனினும் அவர்கள் இன்னமும் தங்களது கிறித்துவப் பெயர்களையோ அல்லது தமது பாரம்பரிய ஆப்பிரிக்க குடும்பப் பெயர்களையோ இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ராமா அல்லது கிருஷ்ணா என்று பெயர் வைக்கின்றார்கள்.
ஒவ்வொரு நாள் மாலையும் இங்கு பக்தர்கள் மாலை நேரப் பிரார்த்தனைக்காக கூடுகிறார்கள்.
அதற்கு பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆப்பிரிக்க இந்துமத குரு கானானந்த சரஸ்வதி
சுவாமி கானானந்த சரஸ்வதி
சுவாமி கானானந்த சரஸ்வதி

1975 ஆம் ஆண்டு கானாவின் முதல் இந்து மடாலயத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வருபவர் சுவாமி கானானந்த சரஸ்வதி.
மாலை நேரப் பிரார்த்தனைகளின் போது, ஒலிபெருக்கி மூலம் இந்துமதத்தின் சிறப்புகளையும் தத்துவங்களையும் வந்துள்ளவர்களுக்கு விளக்குகிறார்.
கானாவின் பூர்வகுடி மதத்தில் பிறந்த தனது பெற்றோர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள் எனக் கூறுகிறார் கானானந்த சரஸ்வதி.
இந்து மதம் குறித்த சில புத்தங்களை தான் படித்ததாகவும், அதன் பின்னர் ரிஷிகேஷுக்கு தான் பயணித்ததாகவும் அவர் கூறுகிறார்.
அங்கே தான் சந்தித்த ஆன்மீக குரு அக்ராவில் ஒரு இந்து மடாலயத்தை திறக்குமாறு அறிவுறுத்தியதாகவும் சுவாமி கானானந்த சரஸ்வதி பிபிசியிடம் தெரிவித்தார்.
"அவரது இயற்பெயர் கைட்".
 நாங்கள் யாரையும் இந்து மதத்துக்கு மாறும்படி கூறுவதில்லை 
 
சுவாமி கானானந்த சரஸ்வதி
உண்மையை தேடுபவர்கள் இந்த இந்து மடாலயம் குறித்து விசாரிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்த ஆலயத்துக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமாக கானாவில் இருக்கும் பூர்வ குடி ஆப்பிரிக்க இந்துக்கள் தொடர்ந்து வந்து செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’