அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் இராணுவக் கட்டுப்பாட்டில் இன்றி, புலனாய்வுத்துறையினரின் கீழ் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குமரன் பத்மநாதனுடன் அரசாங்கம் நெருங்கிய தொடர்பை பேணுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
பத்மநாதனை வடமாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்க அரசாங்க தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தி இருந்தமை தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும், இலங்கை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சர்வதேச ரீதியாக இயங்கி வருகின்ற ருத்ரகுமாரன், மற்றும் நெடியவன் போன்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதங்கள் தொடர்பில் அவரின் ஒத்துழைப்பு பெறப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வுகள் குறித்து பத்மநாதனும் கருத்துக்களை முன்வைத்ததாக கூறியுள்ள கோத்தபாய, எவ்வாறாயினும் கடந்த 30 வருடங்களாக புலம்பெயர்ந்த மக்கள் பிரயோசனம் அற்றவகையில் தமது நிதிகளை பயன்படுத்தி விட்டதாக தம்மிடம் தெரிவித்தாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’