வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும்: கோத்தபாய



மிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முனைப்பை வலுவிழக்கச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 11 மார்ச், 2013

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சி: கோத்தபாய



ன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்கி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 23 பிப்ரவரி, 2013

அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: கோத்தபாய



ரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை அறிய மக்கள் மத்தியில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 அக்டோபர், 2011

இலங்கை இராணுவத்தினருக்கு சர்வதேசத்தில் பாரிய அச்சுறுத்தல்: கோத்தபாய


லங்கை இராணுவத்தினருக்கு சர்வதேசத்தில் பாரிய அச்சுறுத்தல்கள் உள்ளன. இதற்கு அரசியல் உள் நோக்கங்களே பிரதான காரணமாகும். இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டானது சர்வதேசத்தின் சோடிக்கப்பட்ட கதையாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனி, 30 ஜூலை, 2011

சனல்4க்கு எதிராக பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோத்தபாய

னல் 4 தொலைக்காட்சி அலைவரிசை கடந்த புதன்கிழமை இரவு ஒளிபரப்பிய வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள், 18 அக்டோபர், 2010

புகலிடம் கோருவோர் விடயத்தில் ஆஸி.கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்:பாதுகாப்புச் செயலாளர்

ட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை கையாளும் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

குமரன் பத்மநாதன் புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார் : கோத்தபாய

அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் இராணுவக் கட்டுப்பாட்டில் இன்றி, புலனாய்வுத்துறையினரின் கீழ் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திங்கள், 7 ஜூன், 2010

பொன்சேகாவைத் தூக்கிலிட வேண்டும் - கோத்தபாய

இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவைத் தூக்கிலிட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 4 ஜூன், 2010

கடல் வழியாகப் போராளிகள், ஆயுதங்களைக் கடத்தும் முயற்சியை முறியடிப்பதற்கான தயார் நிலை அவசியம் கடற்படையை உஷார்ப்படுத்துகிறார் கோத்தபாய

புலிகளின் மரபு ரீதியான இராணு வப் பலம் நிர்மூல மாக்கப்பட்டிருப்பி னும் எத்தகைய சவா லையும் எதிர்கொள் வதற்கான தயார் நிலையில் இலங் கைக் கடற்படை இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செய லர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சனி, 1 மே, 2010

யாழ்.பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர்-பாதுகாப்பு செயலாளர்

யாழ்.குடாநாட்டில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்க ளில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து வெகு விரைவில் வெளியே றுவதுடன் அவற்றை உரிமையாளர்களிடம் உடன் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.