வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஜூலை, 2011

சனல்4க்கு எதிராக பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோத்தபாய

னல் 4 தொலைக்காட்சி அலைவரிசை கடந்த புதன்கிழமை இரவு ஒளிபரப்பிய வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய பொறுப்பற்ற வீடியோக்களை ஒளிபரப்பியமைக்காக சனல் 4 அலை வரிசைக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர், சனல் 4 வீடியோவில் கூறினர்.
இது தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கூறுகையில்;
சவேந்திர சில்வா தான் என்ன செய்கிறார் என்ன செய்யப் போகிறார் என்பதை அனைவருக்கும் கூறிக்கொண்டிருப்பாரா? மேற்படி கொலைகள் எம்மால் செய்யப்பட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவை போலிப் பிரசாரங்களாகும் என்றார். சரணடையும் நபர்கள் குறித்து அப்போது ஐ. நா வதிவிட பிரதிநிதியாக இருந்த நீல் புஹ்னே எமக்கு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டதாக அவர்கள் எப்படி கூறமுடியும்?
முல்லைதீவு அரசாங்க அதிபர் 300,000 பொதுமக்களின் பதிவுகளை கொண்டிருந்தார். யுத்தத்தின் முடிவில் 294 000 பேர் இருந்தனர். ஏனையோரில் பெரும்பாலானோர் பாதுகாப்பு படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட எல். ரி. ரி ஈ யினர் அவர்களில் சிலர், கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டனர் என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவத்தார்.
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினரை நாம் பாதுகாத்து வருகின்றோம். கடற்படையினர் அனைவரின் மரணத்திற்கும் சூசை காரணமானவர் என்ற நிலையில் நாம் அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால் நாம் அவர்களைப் பாராமரித்து வருகிறோம். பிரபாகரனின் பெற்றோரையும் நாம் பராமரித்தோம்.
கொலையாளிகளாகவும் தற்கொலை போராளிகளாகவும் இருந்த 11,000 முன்னாள் போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு நாம் புனர்வாழ்வளித்து கல்வியளித்து மீண்டும் சமூகத்தில் இணைத்துள்ளோம்.
முந்தைய வீடியோவில் தோன்றிய பெண் முன்னாள் எல். ரி. ரி. ஈ அங்கத்தவர் என்பதற்கு எம்மிடம் ஆதாரம் உள்ளது. அவர் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட 200,000 பொது மக்களுடன் இருந்தவர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’