வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும்: கோத்தபாய



மிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முனைப்பை வலுவிழக்கச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவாளர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.வங்குரோத்து அடைந்த உள்நாட்டு அரசியல் சக்திகளை சில வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்தி இறைமையுடைய நாடுகளில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்ட்டு வருவதாகவும், இந்த முயற்சிகளை சுலபமாக வெற்றிகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’