வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 மார்ச், 2013

காங்கிரஸிலிருந்து விலகியதால் இலங்கை தமிழர் விடயத்தில் மாற்றம் இல்லை: கருணாநிதி



க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலகியதால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க விலக வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாராம். ஆனால் நான் (கருணாநிதி) அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வர் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றினேன் என்று அவர் கூறியுள்ளார். பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னைச் சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி ராஜினாமா நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதில் எதை ஜெயலலிதா நாடகம் என்கிறார்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக அப்போது ஜெயலலிதா, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குப் புரியவில்லை என்று கூறினார். இப்படித் தான் கூறியதையே வசதியாக மறந்துவிட்டு பேசுவதற்குப் பெயர்தான் இரட்டை வேடம். இலங்கைப் பிரசச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, சட்டப்பேரவையில் தீர்மானம் என தி.மு.க ஆட்சியில் கண்துடைப்பு நாடகங்கள்தான் நடந்தன என்று ஜெயலலிதா கூறுகிறார். அப்படியென்றால் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஜெயலலிதா போன்ற சிலரின் அபிலாஷையின் காரணமாக கூட்டணி, மத்திய அரசில் இருந்து தி.மு.க இப்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்துவிட்டது? இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டதா? நாடாளுமன்றத்தில் தீர்மானத்தைத் திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா? மத்திய அரசிலிருந்து தி.மு.க வெளியேறியது மட்டும்தான் நடந்தது. ஆனால் அதற்காக தி.மு.க சிறிதும் கவலைப்படவில்லை. 2009ஆம் ஆண்டும் மத்திய அரசிலிருந்து தி.மு.க விலகியிருந்தால் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும்' என்று கருணாநிதி தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’