வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 மார்ச், 2013

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சி: கோத்தபாய



ன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்கி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக அண்மையில் அமெரிக்கா இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பெருந்தொகை பணத்தை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பயனப்டுத்திக் கொள்வதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இந்த நிதி உதவியைக் கொண்டு மேலும் தீவிரமாக பிரச்சாரங்களை முன்னெடுப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான தரப்பினர் ஒன்று கூடும் இடமாக ஜெனீவா மாற்றமடைந்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் சில ஊடகவியலாளர்களுக்கு பெருந்தொகைப் பணம் கிடைக்கப் பெற்றுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகள் குறித்து தீவிர கண்காணிப்பு செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’