
சென்னை கோயம்பேடில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இலங்கைப் பிரச்னையில், போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி கோயம்பேட்டில் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்துவந்த மாணவர்கள் எட்டு மாணவர்களை பொலிஸார் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி தடுப்புக் காவலில் வைத்தனர். மாணவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக அங்கே இருந்தவர்களையும் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றி அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். உண்ணாவிரதப் பந்தலுக்கு சீல் வைக்கப்பட்டது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’