ஐநா சபையின் கொழும்பு அலுவலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கைகளில் இறங்குமிடத்து தாமும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
இன்று காலை விமல் வீரவன்ச தலைமையில் சுமார் ஆயிரம் பேர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டதோடு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர்.
இந்நிலையில் அவ்விடத்திற்கு மீண்டும் வந்த விமல் வீரவன்ச பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு உடனடியாக அவ்விடத்திலிருந்து பொலிஸாரை அகற்றிக் கொள்ளுமாறும் இல்லாவிட்டால் தாமும் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாகவும் கூரியதாகத் தெரிய வருகின்றது.













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’