இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினரும், நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட மற்றும் மேற்கொண்டு வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் படையினர் மிகவும் ஒழுக்கத்துடன், கொலைகார பயங்கரவாத இயக்கத்தை மூன்று வருடங்களுக்குள் இல்லாதொழித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவினால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விடுத்த அறிக்கையே ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் விரல் சுட்டுவதற்கு வழிகோலியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினர் ஈட்டிய யுத்த வெற்றியை எந்த காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்க இயலாது எனவும், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சர்வதே சக்திகளின் சதி முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’