வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நாடாளுமன்றத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடாளுமன்றத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 டிசம்பர், 2011

வரவுசெலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு அங்கீகரிக்கப்பட்டது


வரவுசெலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வியாழன், 2 டிசம்பர், 2010

நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் சில நிமிடங்களுக்கு பிற்போடப்பட்டன.

புதன், 8 செப்டம்பர், 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்

18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளி, 9 ஜூலை, 2010

2010 வரவு- செலவு திட்டத்திற்கு நாடாளுமன்ற அங்கிகாரம்

2010ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டத்தினை தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இந்த வரவு- செலவுத்திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க மீது போத்தல் தாக்குதல்

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது போத்தல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

சனி, 3 ஜூலை, 2010

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 138 வாக்குகள் அங்கீகரிப்பு

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புக்கு 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாக்கெடுப்பில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை

புதன், 23 ஜூன், 2010

29 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிப்பதில் புதிய சம்பிரதாயம்

இம்மாதம் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுதிட்டத்தில் புதிய சம்பிரதாயமொன்று உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 26 ஏப்ரல், 2010

தேர்தலில் போட்டியிட்டோரில் சகோதரர்கள்-உறவினர்கள் பலர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு

பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் பலர் இம்முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை புதன் சுபநேரத்தில் பதவிப் பிரமாணம் _

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 21 ஆம் திகதி சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்யும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

அவசரக் காலச்சட்டம் மேலும் ஒரு மாதம்வரை நீடிப்பு


அவசரக் காலச்சட்டம் 97 வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிக்கவில்லை.

இதனையடுத்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரக் காலச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.