இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது போத்தல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
எனினும் ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க அவரது கையால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எறியப்பட்ட போத்தலை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறதுஇதனால் அந்த போத்தல் ரணிலை தாக்கவில்லை
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க பிரதியமைச்சரான சரத்குமார குணரத்னவே இந்த போத்தல் தாக்குதலை நடத்தியவராவார்
இதனையடுத்து போத்தல் ரணில் மேசையில் வீழ்ந்ததுடன் அவரின் ஆவணங்கள் நீரினால்; நனைந்தன
இதன் போது ஆளும் கட்சியின் அமைப்பாளர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரதியமைச்சரிடம் சென்று அவரை சமாதானப்படுத்தயுள்ளார்
இந்தநிலையில் பிரதியமைச்சர் குணவர்த்தனவை சபையில் இருந்து வெளியேற்றுமாறு ஐக்கிய தேசியக்கட்சியினர் கோசம் எழுப்பினர்
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர்.
இந்தநிலையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பில் அரசாங்க கட்சி வெற்றிப்பெற்றது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’