முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சிலருடன் மிகவும் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக எமது இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கும் வகையில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளும்பட்சத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு
அழைத்துவருவதே இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.
சந்திரிகா மீண்டும் அரசியலில் பிரவேசித்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரில் அதிகளவானோரை எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டணியுடன் இணைக்காலம் என மங்கள சமரவீர கருதுகிறார்.
இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியுடன் இது சம்பந்தமாக பேச்சுவாரத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவை கலைத்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி, மங்கள சமரவீரவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’