அரசாங்கத்தை விமர்ச்சித்து பத்திரிகைகளுக்கு கவிதைகளை எழுதியதாக கூறப்படும் கடற்படைத் தலைமையகத்தின் சிவில் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து நீக்குவதற்காக கடற்படைத் தலைமையகம், பொது நிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளரின் ஆலோசனையை கோரியுள்ளது.
யுத்தம் முடிவடைந்த ஒரு வருடப் ப+ர்த்தியை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட இராணுவத்தினருக்கான மரியாதையளிக்கும் வைபவம் மற்றும் யுத்தத்தை வழி நடத்திய ஜெனரல் சரத் பொன்சேக்காவை சிறை வைத்திருப்பது குறித்து விமர்சிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஊழியர் கவிதையொன்றை எழுதியுள்ளதுடன் அந்த கவிதை கடந்த 24ம் திகதி திவயின பத்திரிகையில் வெளியாகியுள்ளது.இதனால் ஆத்திரமடைந்துள்ள கடற்படைத் அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவின்படி குறித்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதற்கான சட்டத் திட்டங்களை ஆராய்ந்து ஆலோசனைக் கூறுமாறு பொது நிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’