-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜே.வி.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜே.வி.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 28 டிசம்பர், 2012
சனி, 7 ஏப்ரல், 2012
ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கைது
ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான குமார மஹாத்தயா என அழைக்கப்படும் பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுத்து ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வியாழன், 1 செப்டம்பர், 2011
அவசரகால சட்டத்தை நீக்குவதாக கூறி அரசாங்கம் ஏமாற்றுகிறது: ஜே.வி.பி.
அ வசரகாலச் சட்டத்தை நீக்குவதாக கூறி பொதுமக்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது என ஜே.வி.பி. விமர்சித்துள்ளது.
சனி, 30 அக்டோபர், 2010
பொதுமக்களுக்கு ஜே.வி.பி. அழைப்பு
மாணவர்களின் உரிமைகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கும் ஒன்றிணையுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வியாழன், 14 அக்டோபர், 2010
சரத் பொன்சேகாவின் ஆசனத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : லக்ஸ்மன் நிபுணாரச்சி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ஆசனத்தை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
தொந்தரவுபடுத்தப்பட்டதாக ஜே.வி.பி. புகார்
வவுனியாவில் கட்சி அலுவலகமொன்றை திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது தாண்டிக்குளம் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை இனங்காட்டிக்கொண்ட நபர்கள் சிலரும் தம்மை தொந்தரவுபடுத்தியதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது
வியாழன், 2 செப்டம்பர், 2010
அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஜேவிபி துண்டுப் பிரசுரம்
அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 லட்சம் துண்டுப்பிரசுரங்களை ஜே.வி.பி.விநியோகித்துள்ளது
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
ஜே.வி.பி. எம்.பிகள் கைது
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளீன் ஹேவகே ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
புதன், 24 மார்ச், 2010
பொன்சேகாவுக்கு இயற்கை மரணம் ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றது : ஜே.வி.பி.
இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கான உணவு மற்றும் காற்றோட்ட வசதிகளைத் தடுப்பதன் மூலம் அரசு அவர் இயற்கை மரணம் எய்தும் சூழ்நிலையை உருவாக்குகிறது என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதன், 17 பிப்ரவரி, 2010
Photo அலரிமாளிகையை மக்கள் கைப்பற்றுவதற்கு முன் பொன்சேகாவை விடுதலை செய்யவும்: ஜே.வி.பி. சூளுரை

சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி.சூளுரைத்தது.
ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர்.
ஜே.வி.பி. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொணட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை ஆரம்பமாகி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கறுப்பு கொடிகளை ஏந்தியும், அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு மருதானை, டீன்ஸ் வீதியூடாக லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தது.
ஊர்வலத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய், பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி, தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலை செய், நாட்டின் தளபதியை விடுதலை செய், ஜனாதிபதி கதிரை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், சுற்றுவட்டம் மற்றும் ஊர்வலம் பயணித்த வீதிகளில் முக்கிய இடங்களில் மேலதிக பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
எதிர்ப்பு ஊர்வலம் லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தவுடன் அங்கு தற்காலிகமாக மேடையொன்று அமைக்கப்பட்டு எதிர்ப்பு கூட்ட·ம் நடத்தப்பட்டது. இதில் மக்கள் விடுதலை ·ன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லால் காந்த, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உரையாற்றினர்.
முன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார், அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தை கைவிடாது.
ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும்.
தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம் என்றார்.
முன்னாள் எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகையில்,
தனிப்பட்ட குரோதங்களுக்காகவோ,ஜனநாயகத்திற்கு எதிராகவோ செயற்பட்டமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை. மக்களின் ஆணையை கோரியமைக்காகவே அவரை கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.
58 வீதமான மக்கள் வாக்களித்தார்களாயின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன்?அச்சம் கொள்ளவேண்டும், மக்கள் ஆணையை களவெடுத்தவர் ஜனாதிபதி கதிரையில் இருக்கமுடியாது. ஜனாதிபதி பெறுபேறுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளோம். வாக்குகளை மீள எண்ணவேண்டும். இல்லையேல் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க உரையாற்றுகையில்,
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இங்கு மட்டுமல்லாது முழு உலகிலும் நடத்தப்படுகின்றது.
எங்களுக்கு கணனி அறிவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் செய்த கணனி விளையாட்டு உண்மை இல்லை என்பதனை மகாபோதியின் முன்னிலையில் சத்தியம் செய்ய முடியுமா? அவ்வாறு பொய்யாக சத்தியம் செய்தால் அவரது இதயம் நூறுதுண்டுகளாக சிதறும்.பொய்யென்றால் எனது இதயம் ஆயிரம் துண்டுகளாக சிதறும்.
ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் மகாநாயக்க தேரர்களும் இந்த விடயத்தில் தலையிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஜெனரலை விடுதலை செய்வதற்குமான மக்கள் போராட்டம் அவரை விடுவிக்கும் வரையில் தொடரும் என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















