வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 செப்டம்பர், 2011

அவசரகால சட்டத்தை நீக்குவதாக கூறி அரசாங்கம் ஏமாற்றுகிறது: ஜே.வி.பி.

வசரகாலச் சட்டத்தை நீக்குவதாக கூறி பொதுமக்களை அரசாங்கம் ஏமாற்றுகிறது என ஜே.வி.பி. விமர்சித்துள்ளது.
தற்போதும் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது நீதிமன்றின் உத்தரவின்றி, வீடுகளில் தேடுதல் மேற்கொள்ளும் அதிகாரத்தை பொலிஸார், இராணுவத்தினருக்கு வழங்குவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸாரும் இராணுவத்தினரும் கைதிகளிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கும் நீதிமன்ற வழக்கு எதுவுமின்றி நீண்டகாலத்திற்கு தடுத்துவைத்திருக்கவும் முடியும் என அவர் கூறினார். 'பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கும்வரை மக்களுக்கு அவர்கள் விரும்பும் சுதந்திரம் கிடைக்காது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் நீடிக்கும்' எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’