மாணவர்களின் உரிமைகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கும் ஒன்றிணையுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மாற்று அபிப்பிராயங்களைக் கொண்டவர்களை அரசாங்கம் ஒடுக்குவதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. 28 மாணவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாடுமுழுவதும் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புத் தடைக்குள்ளாகி இருப்பதாகவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ண உட்பட கைதுசெய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்யுமாறும் ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’