வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஜேவிபி துண்டுப் பிரசுரம்

ரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 லட்சம் துண்டுப்பிரசுரங்களை ஜே.வி.பி.விநியோகித்துள்ளது
.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளே வகிக்க முடியுமென தற்போதைய அரசியலமைப்பில் விதிமுறை தெரிவிக்கின்றது.
எனவே அப்பதவி எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாகவே இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜே.வி.பி.விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பிரதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் ஜே.வி.பி.தலைவர்கள் பலர் பங்கெடுத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’