வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010

பொன்சேகாவுக்கு இயற்கை மரணம் ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றது : ஜே.வி.பி.

இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கான உணவு மற்றும் காற்றோட்ட வசதிகளைத் தடுப்பதன் மூலம் அரசு அவர் இயற்கை மரணம் எய்தும் சூழ்நிலையை உருவாக்குகிறது என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கான உணவையும், உரிய காற்றோட்ட வசதிகளையும் தடுப்பதன் மூலம் அரசு அவருக்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்த முயல்கிறது.
திங்கட்கிழமை சரத் பொன்சேகாவிற்கு நான் மதிய உணவை எடுத்துச் சென்ற வேளை, அதனை வழங்குவதற்கு அனுமதியளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அனோமா பொன்சேகாவிற்கு மாத்திரமே இதற்கான அனுமதியுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.
பொன்சேகாவிற்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமையால், உரிய காற்றோட்ட வசதிகள் அவசியம்.
எனினும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்கான காற்றோட்ட வசதியைத் தடைசெய்துள்ளமை மூலம் அரசு அவரை நோயாளியாக்க முயல்கின்றது.
பொன்சேகா இயற்கை மரணம் எய்தும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகின்றது என நாங்கள் கருதுகிறோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’