வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு கோட்டை நீதவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு கோட்டை நீதவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 பிப்ரவரி, 2012

விடுதிமுகாமையாளரும் எட்டு பெண்களும் பிணையில் செல்ல அனுமதிப்பு


கொள்ளுபிட்டி செல்லமுத்து அவெனியூவில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்நிலையத்தின் முகாமையாளரையும் 8 பெண்களும் பிணையில் செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன அனுமதித்தார்.

புதன், 11 ஜனவரி, 2012

முதல் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியின் சகோதரியிடம் 11.5 மில்லியன் ரூபா மோசடி


லங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி சட்டத்தரணியின் மூத்த சகோதரியிடம் தம்பதியொன்று 11. 5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை நீதிமன்றில் இன்று தெரியவந்தது. வயோதிபர் விடுதியில் தங்கியிருந்த ஷீலா செனவிரட்ன எனும் 85 வயதான பெண்ணிடம் பாசம் காட்டுவதுபோல் பழகி 11.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக டினெல்கா எம். பெர்னாண்டோ என்பவர் மீதும் அவரின் கணவர் மகேஷ் பெர்னாண்டோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டபோது, ஷீலா ஷெனவிரட்வின் சார்பில் அவரின் இளைய சகோதரியான மொரின் செனவிரட்ன ஆஜரானார். மொரின் செனவிரட்ன இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 25 நவம்பர், 2011

ஆசிரியையை நிர்வாணப் படமெடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் பிணையில் விடுதலை


சிரியை ஒருவரை நிர்வாணமாக படம்பிடித்து, அப்படங்களை பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிடப்போவதாக கூறி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு கோட்டை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்தார்.

வியாழன், 4 நவம்பர், 2010

ஆபாச இணையத்தளங்களில் தோன்றிய 83 பேரின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாச இணையத் தளங்களில் தோன்றிய இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் 83 முகங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தின் பொதுமக்கள் உறவு பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

பிக்குவுக்குப் பிடிவிறாந்து

நீதிமன்றத்தில் ஆஜராகாத பெளத்த பிக்கு ஒருவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது

திங்கள், 12 ஜூலை, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியல் 26ஆம் திகதி வரை நீடிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விளக்கமறியலை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை நீடிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திங்கள், 5 ஜூலை, 2010

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தடுப்பு

இன்று நண்பகல் மட்டக்குளி அசம்பாவிதம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் என நம்பப்படுபவர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

சாள்ஸ் விஜயவர்த்தன கொலை சந்தேகநபர் தொடர்ந்து காவலில்

போர் நிறுத்த காலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜயவர்த்தன கொலை யுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலி சந்தேக நபரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.