ஆபாச இணையத் தளங்களில் தோன்றிய இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் 83 முகங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தின் பொதுமக்கள் உறவு பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஆபாச இணையத்தளங்களில் தோன்றியவர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக மேற்படி நபர்களின் முகங்களை பத்திரிகைகளில் பிரிசுரிப்பதற்கு உத்தரவிடுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு கோரியிருந்தது.
ஆபாச இணையத்தளங்களில் தோன்றிய 80 பெண்களினதும் 3 ஆண்களினதும் புகைப்படங்களை தாம் எடுத்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.
'ஆபாச இணையத் தளங்களிலிருந்து நாம் இப்படங்களை எடுத்தாலும் அந்நபர்கள் இருக்கும் இடம் பற்றி எமக்குத் தெரியாது. அதனால் அந்நபர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலம் அந்நபர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கிறோம்' என சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’