வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 ஜூலை, 2010

சாள்ஸ் விஜயவர்த்தன கொலை சந்தேகநபர் தொடர்ந்து காவலில்

போர் நிறுத்த காலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜயவர்த்தன கொலை யுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலி சந்தேக நபரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கொழும்பு கோட்டை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கவனத் தில் கொண்ட நீதவான் சந்தேக நபரை 30 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து வவுனியா விலுள்ள முகாம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் தமக்குக் கிடைத்த தகவல்களையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரி சாள்ஸ் விஜயவர்த் தனவின் கொலையில் குறித்த நபர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’