மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகப் பொலிஸ் நிலையத்துக்குப் பலத்த சேதமேற்பட்டது. இதனையடுத்து அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில், போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபரொருவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அவர் திடீரென பொலிஸ் நிலையத்தின்ஜன்னல் கண்ணாடி மீது பலமாக அடித்ததன் காரணமாக அவரது கையில் காயமேற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்..
இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட நபர், பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியே காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென்ற யூகத்தின் அடிப்படையில் ஆத்திரமடைந்த மக்கள் பொலிச்நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’