வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

பிக்குவுக்குப் பிடிவிறாந்து

நீதிமன்றத்தில் ஆஜராகாத பெளத்த பிக்கு ஒருவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது
.இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சாகும் உண்ணாவிரதம் இருந்தார்கள் என 12 பெளத்த பிக்குகளுக்கு எதிராக கோட்டை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
பிக்குகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான சுனில் வட்டகல மற்றும் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி, பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டர் மூன்று மெத்தைகைகளை மற்றும் நிதி சேகரிக்கும் உண்டியல் என்பவற்றை திருப்பி ஒப்படைக்கவில்லை என்றனர். இதற்குப் பதிலளித்த பொலிஸ் பரிசோதகர் லலித் சிலோகம, இவைகள் கோட்டை பொலிஸாரிடம் இல்லை எனவும் இவைகள் அனைத்தும் கொம்பனித்தெரு பொலிஸாரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்ளும் படி பாதுகாப்பு சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பௌத்த பிக்குமார்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’