வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இடம்பெயர் குடும்பங்களுக்குச் சட்டபூர்வ காணி உறுதி வழங்க அரசு தீர்மானம்

டம்பெயர்ந்த 25 ஆயிரம் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளுக்கான சட்டபூர்வ உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது
.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், காணி சீர்திருத்த ஆணைக் குழு, சர்ச்சைக்குரிய காணிகளின் முறையான சொந்தக்காரர்களுக்கு அவற்றுக்கான உறுதியை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்க காணி சீர்திருத்த ஆணைக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறு 50 குடும்பங்களுக்கு ஏற்கனவே உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’