வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஜனவரி, 2012

முதல் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியின் சகோதரியிடம் 11.5 மில்லியன் ரூபா மோசடி


லங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி சட்டத்தரணியின் மூத்த சகோதரியிடம் தம்பதியொன்று 11. 5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை நீதிமன்றில் இன்று தெரியவந்தது. வயோதிபர் விடுதியில் தங்கியிருந்த ஷீலா செனவிரட்ன எனும் 85 வயதான பெண்ணிடம் பாசம் காட்டுவதுபோல் பழகி 11.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக டினெல்கா எம். பெர்னாண்டோ என்பவர் மீதும் அவரின் கணவர் மகேஷ் பெர்னாண்டோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டபோது, ஷீலா ஷெனவிரட்வின் சார்பில் அவரின் இளைய சகோதரியான மொரின் செனவிரட்ன ஆஜரானார். மொரின் செனவிரட்ன இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’