கொள்ளுபிட்டி செல்லமுத்து அவெனியூவில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்நிலையத்தின் முகாமையாளரையும் 8 பெண்களும் பிணையில் செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன அனுமதித்தார்.
இச்சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதற்கு அவர்களின் பெற்றோர், கணவர், சகோதரர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் பிணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதவான் கூறினார். சந்தேக நபர்கள் சட்டத்தின்படி நடப்பதை பிணையாளிகள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறிய நீதவான், குற்றச்செயல்களில் ஈடுபடாதிருக்கும்படி சந்தேக நபர்களுக்கு அறிவுறுத்தினார். மீண்டும் குற்றமிழைத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். இவ்விடுதியில் பெண்ணொருவரை பெற்றுக்கொள்வதற்கு மாறுவேறுடத்தில் சென்ற ஒருவரிடம் 2000 ரூபா அறவிடப்பட்டதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’