வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012


டந்தகால யுத்த சூழலின் வடுக்களையும் சுமைகளையும் துன்ப துயரங்களையும் நாம் சுமந்தது போன்று எமது எதிர்கால சந்ததியினரையும் சுமக்கவிடக்கூடாது அவ்வாறானதொரு சூழல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (15) யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்கன் தழிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வளமான ஒரு எதிர்காலத்தை எமது சிறார்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவே நவீன உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப எமது சிறார்களும் பயணிக்க வேண்டும் எனத் தெரிவித்த ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வட மாகாண கல்வியினை ஒர் உன்னத நிலைக்கு கொண்டு வருவதற்காக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவே எதிர்கால வட மாகாணம் கல்வி சிறந்த ஒரு நிலையினை அடையும் என்ற நம்பிக்கை எம் அனைவரிடமும் உண்டு. மேலும் இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட பிரதேசம் என்ற வகையில் இப்பிரதேச மக்களுக்கு பல்வேறு அடிப்படைத்தேவைகள் இன்னமும் பூர்;த்தி செய்யவேண்டியுள்ளது அதற்காக மார்ச் இரண்டாம் திகதி துறைசார் உரிய அதிகாரிகளுடன் நேரில் கட்டைக்காடு கிராமத்திற்கு வருகைதந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதற்கு முன்னதாக இலகு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் வீதியினையும் செப்பனிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கிராமத்தின் விளையாட்டு கழக மைதானம் புனரமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பாடசாலையின் வளப்பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு படிப்படியாக தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார் இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர் யோகலிங்கம் வடமராட்சி வலய கல்விப்பணிப்பாளர் நந்தகுமார் அருட்தந்தை ஜேசுரட்ணம் உதவிபங்கு தந்தை யஸ்ரின் ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சிறிரங்கேஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர் மணிரத்தினம் கோட்டக்கல்வி அதிகாரி பொன்னையா மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’