ஆசிரியை ஒருவரை நிர்வாணமாக படம்பிடித்து, அப்படங்களை பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிடப்போவதாக கூறி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு கோட்டை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்தார்.
தனியார் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றும் மேற்படி நபர் இவ்வருடம் செப்டெம்பர் 15 ஆம் திகதி பேஸ் மூலம் தன்னுடன் நட்பானதாக அகலவத்தையை சேர்ந்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பின்னர் இந்நட்பு காதலாக மாறியதாகவும் இருவரும் செல்லிடத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டெம்பர் 17ஆம் திகதி இருவரும் பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் சந்தித்ததாகவும் அங்கு சந்தேக நபர் தனது நிர்வாண புகைப்படங்களை பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். சந்தேக நபரின் கோரிக்கையின் பேரில் தான் இப்புகைப்படங்களை பிடிப்பதற்கு இணங்கியதாகவும் அவர் தன்னை திருமணம் செய்வதாகவும் வாக்குறுதியளித்தாகவும் பொலிஸாரிடம் ஆசிரியை தெரிவித்துள்ளார். சந்தேக நபருக்கு தான் 11,000 ரூபா பணம் கொடுத்தாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பின் சந்தேக நபரினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.சி.டி) சந்தேக நபரை கைது செய்து நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கிங்ஸ்லி ஹெட்டியாரச்சி, தனது கட்சிக்காரர் ஒருபோதும் மேற்படி ஆசிரியையை அச்சுறுத்தவில்லை எனக் கூறினார். அந்த ஆசிரியையின் சம்மதத்துடனேயே சந்தேக நபர் புகைப்படங்களை எடுத்ததாகவும் அவர் தெரவித்தார். இவர்களின் காதல் முறிந்த பின்னரே மேற்படி குற்றச்சாட்டு குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கட்சிக்காரரும் ஆசிரியைக்கு 20,000 ரூபா பணம் வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி ஹெட்டியாரச்சி கூறினார். வாதங்களை அவதானித்த நீதவான், சந்தேக நபரை 7,500 ரூபா ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’