வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இலங்கையரின் பாதுகாப்பை உறுதி செய்க: இந்தியாவிடம் அரசு வேண்டுகோள்


சென்னையில் இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அந்நாட்டிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழன், 17 ஜனவரி, 2013

மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 13 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு


த்திய கிழக்கிலிருந்து இலங்கைக்குக் கடத்திவரப்பட்ட சிகரட் மற்றும் அதிவேக மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

இணையத்தளங்களை 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்: அரசாங்கம்


புதிய ஒழுங்குமுறைகளுக்கு அமைய, இலங்கையில் செயற்படும் இணையத் தளங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சனி, 15 டிசம்பர், 2012

கடந்த 9 மாதங்களில் 2704 பேர் தற்கொலை


இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில்2 ஆயிரத்து 704 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 92 பேர் ஆண்களும் 612 பேர் பெண்களுமாவர்.

புதன், 12 டிசம்பர், 2012

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி


நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

இலங்கைக்கு மற்றுமொரு கடன் தவணை _


ர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அங்கீகரித்துள்ள கடன் திட்டத்தின் கீழ் மற்றுமொரு கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடனின் பெறுமதி 426.8 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள், 26 செப்டம்பர், 2011

மறப்போம் அல்லது மன்னிப்போம்” - விடுதலைப்புலிகளின் கொடுமையான படுகொலை தொடர்பாக மீள்பார்வை

து ஒரு பாரிய துன்பம், பயங்கர வரலாற்று துன்பம், நாம் இதையிட்டு பெரிதும் வருந்துகின்றோம். இதை பெரும்தன்மையோடு இந்திய அரசும் மக்களும் கடந்த கால நினைவுகளை பின்போட வேண்டும்” என்டன் பாலசிங்கம்(2006 ஜூன் 27)

திங்கள், 19 செப்டம்பர், 2011

பான் கீ மூனின் மரபு மீறிய செயல் கடும் தொனியில் கடிதம் எழுத முடிவு

.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்துடனான அடிப்படை இராஜதந்திர முறைகளுக்கு முற்றிலும் முரணான ரீதியில் நடந்துகொண்டதை கண்டிக்கும் வகையில் மூனுக்கு எதிராக கடுமையான கடிதம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அரசாங்கம் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதன், 24 ஆகஸ்ட், 2011

சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை: இலங்கை

யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் சில விடயங்களை இலங்கை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பது நியாயமற்றது என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

பெண்ணாக மாற்றப்படும் ஆண்: கொழும்பில் நடைபெறும் சத்திர சிகிச்சை _

ண்களுக்குரிய ஹோமோன்களுடன் பெண்ணாய்ப் பிறந்த 8 வயது சிறுமியை பெண்களுக்குரிய ஹோமோன்கள் உடையவராக மாற்றும் சத்திரசிகிச்சையொன்று தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ரஷ்யாவிடமிருந்து 14 இராணுவ ஹெலிகளை வாங்கும் இலங்கை

யுத்தம் முடிந்து இரு வருடங்கள் கடந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து 14 எம்.171 இராணுவ ஹெலிகொப்டர்களை இலங்கை வாங்கியுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபொரோன் எக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 27 மே, 2011

ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியர்களுக்கான இலவச வீசா இரத்து

திர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியர்களுக்கான இலவச விசாவை இலங்கை இரத்துச்செய்துள்ளது. இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தற்போது விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்திலேயே அவர்களுக்கான விசா வழங்கப்பட்டு வந்தது.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இலங்கையின் நியம நேரம் நேற்றிரவு முதல் அமுல்

லங்கையின் நியம நேரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு அமுலுக்கு வரும்வகையில் அறிவிக்கப்பட்டது. இலங்கையின் உத்தியோகபூர்வ நேரமாக இந்த நேரத்தை காண்பிப்பது அவசியமாகும் என அதிகாரியயாருவர் தெரிவித்தார்.

திங்கள், 14 மார்ச், 2011

இலங்கையின் பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு

ண்ணெய் வள நாடுகளில் இடம்பெறும் அரசியல் கிளர்ச்சிகள் மற்றும் ஜப்பானில் எற்பட்ட சுனாமி என்பவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்தத் தயாராகிறது அரசு

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கு விசா மறுப்பு _

நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்துள்ளது.

புதன், 18 ஆகஸ்ட், 2010

உலகின் அதிசிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 66ஆவது இடம்

பிரஜைகளுக்கு ஆரோக்கியத்தையும் செழிப்பையும் வழங்கும் நாடுகளுள் 66ஆவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

வியாழன், 15 ஜூலை, 2010

இந்து சமுத்திரத்தில் நீர் மட்டம் உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு

இந்து சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்படும் எனவும் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளி, 25 ஜூன், 2010

டொட் இலங்கை விரைவில் அறிமுகம்

'எல்கே"-க்குப் பதிலாக 'இலங்கை"-யை ஆள்ளகளப் பெயராக பாவிக்க 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

புதன், 16 ஜூன், 2010

ஆபத்தான நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

அபாயகரமான நிலைமைகள் மற்றும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவிக்கிறது.