வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 ஆகஸ்ட், 2011

சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை: இலங்கை

யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் சில விடயங்களை இலங்கை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பது நியாயமற்றது என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
'உதாரணமாக, இலங்கையில் யுத்தம் முடிந்து வெறும் இரு வருடங்களில் அடைய வேண்டுனெ எதிர்பார்க்கப்படும் தரநிலையை ஸ்பெய்ன், கம்போடியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அடைவதற்கு பல வருடங்கள் எடுத்தன. வேறு சில நாடுகளில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் சென்றது' என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். சர்வதேச மன்றங்களில், அவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையாகவோ, ஐ.நா. பொதுச்சபையாகவோ, பாதுகாப்புச் சபையாக இருந்தாலும் அவை தொடர்பான நடைமுறைகள், குறித்து அவர்கள் தெளிவு பெற்றிருக்க வேண்டும். இது பூகோள முறைமையின் இணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் எனவும் அவர் கூறினார். இந்நடைமுறைகள் சீர்குலைவதற்கு அனுமதிப்பது தவறாகும். இது வலுவற்ற முன்னுதாரணமாகவும் எதிர்காலத்தில் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கும் வழியமைக்கும். ஐ.நா. மனித உரிமைககள் பேரவையானது நாடுகள் தொடர்பான விவாதத்தில் ஒரு நடைமுறையைக் கொண்டுள்ளது. இவ்விடயங்கள் இந்த உலகளாவிய ஆய்வரங்குகளில் இந்த விடயங்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உள்ளூர் தீர்வுகள் மற்றும் பொறிமுறைகளுக்கு சர்வதேச சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், 'எனவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பெறுபேறு குறித்து முன்கூட்டியே தீர்மானம் மேற்கொள்வதோ குறைத்து மதிப்பிடுவதோ தவறானது' எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’