அவசரகால ஒழுங்குவிதிகள் இனிமேலும் நீடிக்கப்படமாட்டா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இதைத் தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவசரகாலச்சட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிந்தபின் அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருந்தன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விடுத்த அறிக்கையொன்றிலும் இலங்கையில் அவசரகாலச்சட்டம் விரைவாக நீக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ஜனாதிபதி, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் எனவே அவசரகாலச் சட்டத்தை இனியும் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். அதேவேளை வடக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக 2000 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார். வட மாகாண சபைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’