வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகமிழைத்துவிட்டது: இ. கம்யூ.கட்சி

லங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் துரோகம் இழைத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இன்று வியாழக்கிழமை கூறினார்.
இந்திய நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய அவர், இந்திய அரசாங்கம் இலங்கை போர்க்குற்ற விவகாரத்தை ஒருபோதும் கிளப்பாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மிக முக்கியமான தருணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகமிழைத்துவிட்டது' என அவர் கூறினார். 'சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் உள்ளன. ஆனால் இதுவரை இந்திய அரசாங்கம் இக்கோரிக்கையை விடுக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் மிக காட்டமான அறிக்கையொன்றை விடுத்துள்ளது' என அவர் கூறினார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ் புலிகளை இலங்கை இராணுவம் ஒடுக்கியபோது, 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 50,0000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை டி.ராஜா மேற்கோள்காட்டினார். "2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது இனப்படுகொலையைத் தவிர வேறில்லை. இத்தகைய படுகொலையை அண்மைக்கால வரலாற்றில் எந்த நாட்டிலும் நாம் காணவில்லை" என அவர் தெரிவித்தார். 'அவர்களின் மரணங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நான் இங்கு இருக்கவில்லை. மாறாக இலங்கையில் கொல்லப்பட்டவர்களுக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கும் நீதிகோருகிறேன். போர்க் குற்ற மற்றும் மனித உரிமை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதற்காக நான் இங்கு நிற்கின்றேன்' எனக் கூறிய ராஜா, இந்தியாவுக்காக தான் யுத்தத்தை நடத்தியதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் தெரிவித்தார். இவ்விவகாரத்தை சர்வதேச ரீதியாக கையாண்டு, இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் உதவிகளை கண்காணிப்பதற்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’