அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஒரு தொகுதி அகதிகளை பொறுப்பேற்க நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இணக்கம் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள 88 இலங்கை அகதிகளை பொறுப்பேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர்கள் நியூஸிலாந்தை நோக்கி பயணித்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அகதி விடயம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்து வருடாந்தம் 750 அகதிகளை கோட்டா முறையில் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த அகதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையின் அடிப்படையில் நியாயமான அகதிகள் என தம்மை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நியூஸிலாந்தில் அகதி முகாம்களை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’