வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 மார்ச், 2011

இலங்கையின் பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு

ண்ணெய் வள நாடுகளில் இடம்பெறும் அரசியல் கிளர்ச்சிகள் மற்றும் ஜப்பானில் எற்பட்ட சுனாமி என்பவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதரா ரீதியாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது பாரிய பாதிப்பாக இல்லை என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
"எகிப்தின் அரசியல் குழப்பங்களால் இலங்கைக்கு அதிக பாதிப்பில்லை. வட ஆபிரிக்க நாடுகளுக்கு கென்யாவே பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும் நாம் ஆரம்ப பின்னடைவையே சந்தித்துள்ளோம்" என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான யேமன், ஜோர்தான், அல்ஜீரியா, ஈரான், ஓமான் போன்ற நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. இதனால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பம் மற்றும் சுனாமி அழிவுகளாலும் இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு உதவி ஜப்பானில் இருந்தே கிடைக்கிறது.
2009 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான உதவி வழங்குனராக ஜப்பானே இருந்து வந்தது. கடந்த ஆண்டு அந்த இடத்தை சீனா பிடித்துக் கொண்டது. ஆனாலும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள அழிவுகள் இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’