யுத்தம் முடிந்து இரு வருடங்கள் கடந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து 14 எம்.171 இராணுவ ஹெலிகொப்டர்களை இலங்கை வாங்கியுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபொரோன் எக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இயற்கை வாயு ஆராய்ச்சி மற்றும் கொள்வனவு தொடர்பாக ரஷ்யாவின் இயற்கைவாயு நிறுவனமான காஸ்புரோமுடன் இலங்கை இவ்வாரம் கலந்துரையாடிய நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஹெலிகொப்டர்கள் இலங்கைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவை அவை சிறந்த போக்குவரத்து வாகனங்கள் எனவும் ரோசோபொரோன் எஸ்போர்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அனடோலி இஸைகின் கூறியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் விமானப்படைப் பேச்சாளரும் மேற்படி எம்.ஐ.171 ஹெலிகொப்டர் கொள்வனவு குறித்து தாம் அறியவில்லை எனக் கூறியுள்ளனர். எனினும் சிவில் சுற்றுலாத்துறையில் தனது ஈடுபாட்டை விஸ்தரிப்பதை விமானப்படை இலக்காக கொண்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் அன்ட்றூ விஜேசூரிய தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’