ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்து அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையிலுள்ள மூவரினதும் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு அரசியலமைப்புகள் தொடங்கியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த பிரச்சினையை தமிழ் நாடு மாநில சட்ட சபையில் கொண்டுவர முயன்றபோது, சபாநாயகர் தடுத்தமையால் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழீழ விடுதலை புலிகள் சார்பான தமிழ் தேசிய குழுக்களான விடுதலை சிறுத்தைகள், மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவை முன்னரே இந்த கோரிக்கைளை வலியுறுத்தியிருந்தன.
பெரியார் திராவிட கழகம், நாம் தமிழர் இயக்கம் ஆகியவை சென்னையில் நடத்திய ஒரு கூட்டத்தில் தமிழ் நாட்டில் மரண தண்டனையை ஒழிக்குமாறும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை யாப்பின் 16ஆவது சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுள் தண்டனையாக குறைக்குமாறும் ஆளுநருக்கு சிபாரிசு செய்யும் ஒரு தீர்மானத்தை தமிழ் நாடு சட்ட சபையில் நிறைவேற்றும் படி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் 1974ஆம் ஆண்டு தமிழ் கவிஞரான கலிய பெருமாளுக்கும் கேரளாவில் சி.எ.பாலனுக்கும் சட்ட சபை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டு தண்டனை குறைக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு பேரறிவாளனின் தயாரான அற்புதம் அம்மாளும் வந்திருந்தார். இக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பலர்,
இந்த சந்தர்ப்பத்தை தாம் மரண தண்டனையை ஒழிக்க செய்வதற்கு பயன்படுத்துவதாக கூறினார். இந்த மூவரையும் குறிப்பாக பேரறிவானை தண்டிக்க சட்டம் வளைக்கப்பட்டுள்ளது. 19 வயதாக இருந்த போது 9 வோல்ட் மின் கலத்தை வாங்கி கொடுத்ததே இவர் செய்த குற்றம் எனக் கூறினர்.
தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆயினும் இம்மூவரையும் குற்றவாளிகளாக்க தடா சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்துவைத்திருந்த போது அளித்த ஒப்புதல் வாக்குமூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கொலைக்கு பழிவாங்கலே அன்றி பயங்கரவாதம் ஊக்குவிசையாக இருக்கவில்லை என கொள்கின்றது என கொளத்தூர் மணி கூறினார்.
சோனியா அரசாங்கம் கருணை மனுவை நிராகரிப்பதில் அவசரமாக செயற்பட்டது. ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் யாவருமே இறந்துவிட்டனர். கொலைக்கு உதவியவர்கள் இரண்டாம் சற்று தண்டனைக்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இதே குற்றத்திற்காக 20 வருடங்களை சிறையில் கழித்துவிட்டனர் என கொளத்துர் மணி கூறினார்.
எனது மகன் இல்லாதிருந்தால் புலிகளால் மின்கலம் வாங்க முடியாமல் போயிருக்குமா? புலனாய்வு அதிகாரியின் ரகோதமன் கருத்துப்படி குண்டுப் பட்டியை தயாரித்தவர்கள் பற்றி இதுவரை அறியப்படாமலேயே உள்ளது. அப்படியானால் எனது மகன் எப்படி குற்றவாளியாவான் என அற்புதம் அம்மாள் அழுது கொண்டே கூறினார்.
அரசியல் விஞ்ஞான போராசிரியரான போல் நியூமன் எனது நீதிமன்றத்தில் இவர்கள் மூவரும் குற்றமற்றவர்கள் என கூறினார்.
இதேவேளை, திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதி, இந்த மூவருக்கு மட்டுமல்ல எவருக்குமே மரண தண்டனை வழங்க கூடாது என தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’