வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் கீழ் அரியாலை நாவலடியில் தரமற்ற வீடுகள்: யாழ். அரச அதிபர்

ந்திய அரசின் வீட்டுத்திட்டதில் யாழ்.அரியாலை நாவலடிப் பகுதியில் அமைக்கப்படும் வீடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 150 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அரியாலை நாவலடிப் பகுதியில் 50 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்படும் வீடுகள் தரமாக உரியமுறையில் அமைக்கப்படவில்லை என தமக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து வீடமைப்பு வேலைத் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். அரச அதிபர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மாவட்ட பொறியியல் குழுவினரால் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு தரமான முறையில் அமைப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’