வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இலங்கையரின் பாதுகாப்பை உறுதி செய்க: இந்தியாவிடம் அரசு வேண்டுகோள்


சென்னையில் இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அந்நாட்டிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இலங்கை வங்கியின் கிளை தாக்குதலுக்குள்ளானது. இதில் வங்கிப் பணியாளர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இதைத் தொடர்ந்து இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்கள், மஹாபோதி சமூகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற இலங்கை நிறுவனங்களுக்கும் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’