வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்,ஹலால் விவகாரங்களை கவனமாக கையாள்கின்றோம்: கெஹலிய


த சுதந்திரமும் மத உரிமையும் சகலருக்கும் இருக்கின்றது. ஆனால் அடிப்படைச்சட்டத்திற்கு சகலரும் மதிப்பளிக்கவேண்டும் என்பதுடன் விஸ்வரூபம், ஹலால் விவகாரங்களை கவனமாக கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மத உரிமை சகலருக்கும் இருக்கின்றது. அந்த மத உரிமையும் மத சுதந்திரமும் வரையறையை மீறி போகின்றதா? என்ற கதையும் இருகின்றது. மத சுதந்திரமானது அடிப்படைச்சட்டத்திற்கு மதிப்பளிக்கவேண்டும். இன, மத பேதங்கள் இங்கிருந்து உருவாகலாம் என்பதனாலும் பேதங்களை விரைவில் தோற்றுவித்துவிடலாம் என்பதனாலும் ஹலால் விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள்கின்றோம். விஸ்வரூபம் திரைப்படம் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் இந்தியாவில் திரையிடுவதற்கு முன்னர் அந்த திரைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் திரையிடுவதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்றது. அதற்கு பின்னர் படம் வெளியிடுவது 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தையும் கவனமாக கையாள்கின்றோம். அது தொடர்பிர் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுப்போம் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’