வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜூலை, 2012

இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது



லங்கை - இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் 3ஆவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

ஞாயிறு, 18 மார்ச், 2012

பாகிஸ்தானை வென்றது இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை


சிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் இந்திய அணி தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

செவ்வாய், 13 மார்ச், 2012

50 ஓட்டங்களால் இந்தியா வெற்றி


சிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 50 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி பெற்றது.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இலங்கையை வென்றது இந்தியா; ஆஸியுடனான போட்டியில் புள்ளிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை


வுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

வியாழன், 5 ஜனவரி, 2012

ஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய அணி: மார்க் வா


ந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அவர்கள் மோசமாக பேட்டிங் செய்துள்ளனர். களத்தில் ஏதோ வேண்டா வெறுப்பாக விளையாடுவது போல் தெரிகிறது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வா தெரிவித்துள்ளார்.

சனி, 2 ஏப்ரல், 2011

உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது

வ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.

இன்று மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.

புதன், 30 மார்ச், 2011

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி: இலங்கையுடன் மோதுகிறது

லகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியுள்ளது.

இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

வியாழன், 24 மார்ச், 2011

ஆஸியின் ஆட்டம் அடங்கியது; அரையிறுதியில் இந்தியா - பாக். மோதல்

லகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 6 மார்ச், 2011

அயர்லாந்திடம் தப்பியது இந்திய அணி

யர்லாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இந்திய அணிக்கு 6 விக்கெட் வெற்றி

ம்புள்ளையில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகளால் தோற்கடித்தது

சனி, 7 ஆகஸ்ட், 2010

3 ஆவதுடெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி

லங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது.

ஞாயிறு, 27 ஜூன், 2010

யுவராஜ், ஸ்ரீசாந்திற்கு மீண்டும் வாய்ப்பு *இந்திய அணி அறிவிப்பு

சென்னை: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், யுவராஜ்சிங், ஸ்ரீசாந்திற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த

வெள்ளி, 14 மே, 2010

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள்

20 ஓவர், ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றில் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு, டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் அணித்தலைவராக செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஷேவாக்கின் அதிரடி துடுப்பாட்டத்தினால் வலுவான நிலைக்குச் செல்லும் இந்தியா


தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 558 பெற்று தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஹசிம்அம்லா 253 ஓட்டங்களையும் காலிஸ் 173 ஓட்டங்களையும் எடுத்தனர். சகீர்கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை எடுத்து இருந்தது. காம்பீர் 12 ஓட்டங்களுடனும் ஷேவாக் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்கள்.

தென் ஆபிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 56 ஓட்டங்கள் பெறுவதற்க்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது தொடக்க வீரர் கம்பீர் 12 ஓட்டங்களுடன் மார்கல் பந்து வீச்சில் பெவிலியன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் வந்த தமிழக வீரர் முரளி விஜய் 4 ஓட்டங்கள் ஆட்டம் இழந்தார். வங்காளதேச தொடரில் முத்திரை பதித்த டெண்டுல்கர் இன்று பிரகாசிக்க வில்லை. அவர் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். விஜய் டெண்டுல்கர் ஆகியோரது ஆட்டமிழப்பைத் தெடர்ந்து ஜோடி சேர்ந்த பத்ரி நாத் செவாக் நிதானமாக நின்று விளையாடி வருகின்றனர். என்பதுடன் ஷேவாக் சதம் ஒன்றையும் பூர்த்தி செய்துள்ளார்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

இந்திய அணி 279 ஓட்டங்கள்


இலங்கை இந்திய அணிகளுக்கிடையே பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் பகலிரவு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், யுவராஜ் சிங் 74 ஓட்டங்களையும் விரேந்தர் ஷேவாக் 47 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற்றதுடன் அணித் தலைவர் டோனி,ரெய்னா,ஜடேஜா ஆகியோர் முறையே 37,35,39 ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களில் வெலகெதர, 10 ஓவர்கள் பந்துவீசி 66 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

இந்திய அணியில் இஷாந்த், கார்த்திக்


இலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது.
நான்காவது போட்டி வரும் 24ம் தேதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது.
இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர்.
தடை விதிக்கப்பட்டுள்ள தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார். பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்திய அணி:
சேவக்(கேப்டன்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.

சனி, 12 டிசம்பர், 2009

பிறந்தநாள் பரிசை இந்தியாவுக்கு கொடுத்தார் யுவராஜ்


டெஸ்ட் தொடரின் படுதோல்வியின் பின்னர் முதலாவது T /20 போட்டியில் இந்தியாவை பழிதீர்த்த இலங்கை அணியை இந்தியா இரண்டாம் போட்டியில் மீண்டும் பழிதீர்த்துள்ளது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய சங்ககாரவே இரண்டாம் போட்டியிலும் இலங்கை சார்பாக சிறப்பாக ஆடினார் இவர் 31 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.207 ஓட்டங்கள் என்பது இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதாரண இலக்கல்ல.எங்கே இலங்கை டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடியாக T/20 தொடரை கைப்பற்றப் போகிறதோ என்று நினைத்திருக்கையில் ஷேவாக் (64 * 36), தோனி (46 * 28), யுவராஜ்(60 * 25) அதிரடியால் ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா ஆறு விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. ஆட்டனாயகனான யுவராஜ் சிங் தனது 28 ஆவது பிறந்தாநாளிலே ரசிகர்களுக்கு கொடுத்த விருந்தாக அவரது அதிரடி ஆட்டம் அமைந்தது. ஐந்து சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் தன்னை மீண்டுமொருதடவை T/20 சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.(சூப்பர் ஸ்டார் பிறந்ததினத்தில் பிறந்ததால்தான் இந்த சூப்பர்பவரோ?) முதலாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் 15 ஆம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான முன்னோட்டத்தை விரைவில் எதிர்பாருங்கள்.....

வியாழன், 29 அக்டோபர், 2009

2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி


நாக்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் ,இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று நாக்பூரில் நடந்தது. "நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற' அவுஸ்திரேலியா அணி சற்று வித்தியாசமாக பீல்டிங் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், துவக்கினார் சேவக். மறுமுனையில் திணறிய சச்சின் (4) ஓட்டங்களை பெற்றார். தனது அதிரடியை தொடர்ந்த சேவக், ஜான்சனின் 2வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். இவர் 31 பந்தில் 40 ஓட்டங்களுக்கு (1 சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார்.

இதற்கு பின் காம்பிர், தோனி இணைந்து விவேகமாக ஆடினர். இந்த ஜோடி அவுஸ்திரேலிய பந்து வீச்சை எளிதாக சமாளித்தது. ஒன்று, இரண்டு ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கி விகிதம் குறையாமல் துடுப்பாடியது. காம்பிர் 18வது அரைசதம் கடந்தார். , காம்பிர் 76 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 பந்துகளில் 136ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில் தோனி (124), ரெய்னா (62) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்

. மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் சரியாக அமையவில்லை. பெய்ன் (8), வாட்சன்(19) விரைவில் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி தலைவர் பாண்டிங்(8), பிரவீண் குமார் வேகத்தில் அவுட்டாக, 3 விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்து திணறியது.

ஹசி ஆறுதல்: சற்று போராடிய ஒயிட் (23), ஹர் பஜன் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த ஹசியை (53), ஜடேஜா போல்டாக்கினார். பின் வோஜஸ் (36), மார்ஷ் (21) ஆறுதல் அளித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.3 ஓவரில் 255 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது .பரிதாபமாக தோல்வியடைந்தது. இதையடுத்து தொடர் 11 என சமநிலையை எட்டியுள்ளது. ஆட்ட நாயகன் விருதை தோனி வென்றார். ,