20 ஓவர், ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றில் அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டு, டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் அணித்தலைவராக செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை டோனிக்கு பதிலாக ஷெவாக் 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டிக்கு அணித்தலைவரக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
அடுத்த மாதம் நடைபெறும் ஆசியக்கிண்ண போட்டியில் இந்த மாற்றத்தை செய்ய தெரிவு குழு முடிவு செய்கிறது. சிம்பாவேயில் நடைபெறும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் அனுபவ வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு ரெய்னா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11 வீரர்களை தெரிவு செய்த விதம், ஐபிஎல் போட்டியை காரணமாக வைத்து குற்றம் சாட்டியது ஆகியவை காரணமாக டோனி மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது அணித்தலைமைக்கான பதவி குறைக்கப்படுகிறதாம்,
தற்போது அணித்தலைவராக செயற்படும் டோனியை பொறுத்த வரை 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவரது தலைமையில் இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 9 டெஸ்டில் வெற்றி பெற்றதுடன். 3 டெஸ்ட் “டிரா†ஆனது. ஒரு டெஸ்டில் தோல்வி அடைந்தது.
78 ஒருநாள் போட்டியில் டோனி அணித்தலைவராக பணியாற்றி உள்ளார். இதில் 44 ஆட்டத்தில் வெற்றி கிடைத்தது. 27 ஆட்டத்தில் தோற்றது. 7 ஆட்டம் முடிவு இல்லை.
டோனி தலைமையில் இந்திய அணி 20 ஓவர் போட்டியில் 24 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 12 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 11 ஆட்டத்தில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2007ஆம் ஆண்டு டோனி தலைமையில் இந்திய அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து இடம்பெற்ற 2 உலக்கிண்ண போட்டிகளிலும் அவரது தலைமையிலான அணி அரை இறுதிக்கு கூட தகுதி பெறவில்லை.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’