வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

ஐ.தே.க.வின் மறுசீரமைப்பு குழுவுடன் ரணில் விக்ரமசிங்ஹ உயர்மட்ட பேச்சு


ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழுவிற்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவிற்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கேம்ரிஜ் டெரஸிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மறுசீரமைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா எமது   இணையதளத்திற்கு சற்றுமுன் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இக்கலந்துரையாடலில் கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பாக ரணில் விக்ரமசிங்ஹ சில முன்மொழிவுகளை முன்வைத்தாகவும் இச்சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாகவும் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பாக ரணில் விக்ரமசிங்ஹ எவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்தார் என்று ஜோசப் மைக்கல் பெரேராவிடம் வினவியபோது அது சம்பந்தமாக தற்போதைக்கு எதுவும் கூறமுடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’