சென்னை: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், யுவராஜ்சிங், ஸ்ரீசாந்திற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த
மாதம் இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் ஜூலை 18ம் தேதி
துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு, சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேற்று
நடந்தது. இக்கூட்டத்தில், பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், தேர்வுக்குழு
தலைவர் ஸ்ரீகாந்த், கேப்டன் தோனி மற்றும் தேர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தேர்வுக்குழு
கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. பின், இலங்கைக்கு எதிரான
இந்திய அணி வீரர்கள் பட்டியலை, பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன்
வெளியிட்டார்.
மோசமான "பார்ம்' மற்றும் போதிய உடல்தகுதி இல்லாததால்,
அணியிலிருந்து நீக்கப்பட்ட யுவராஜ்சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரிலிருந்து பாதியில்
நாடு திரும்பிய சேவக்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
விஜய் வாய்ப்பு:
சச்சின்,
டிராவிட் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய
கோப்பை தொடரில் இடம்பெற்ற பிரவீண் குமார், டிண்டா நீக்கப்பட்டு, இஷாந்த்
சர்மா மற்றும் ஸ்ரீசாந்த்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமித்
மிஸ்ரா, ஓஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழக
வீரர் விஜய் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பராக சாஹா அணியில் இடம்
பெற்றுள்ளனர்.
பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:
எது
நல்லது; கெட்டது என நன்கு ஆலோசனை செய்து அணியை தேர்வு செய்துள்ளோம். இது
சரியான அணி. சச்சின், சேவக், யுவராஜ் இல்லாமல் ஆசிய கோப்பையை, இந்திய அணி
வென்றுள்ளது. இதில், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அணியில் இளம் மற்றும் அனுபவமுள்ள வீரர்கள் இடம் பெற்றதால், தான் கோப்பையை
வெல்ல முடிந்தது. டெஸ்ட் தொடரையும் இந்தியா வெல்லும் என நம்பிக்கை உள்ளது.
அணி தேர்வில் தோனி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையில் என்ன நடக்கும்,
என்ன நடக்காது என ஆய்வு செய்து அதற்கேற்ப அணியை தேர்வு செய்துள்ளோம். இந்த
அணியில் தவறு கண்டுபிடிக்க முடியாது.
டெஸ்ட் அரங்கில் "நம்பர்- 1' இடத்தில் இந்திய அணி தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான, இந்திய அணி:
தோனி(கேப்டன்),
சேவக்(துணை கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின், லட்சுமணன், ரெய்னா,
ஹர்பஜன், ஸ்ரீசாந்த், ஓஜா, இஷாந்த், அமித் மிஸ்ரா, யுவராஜ், முரளி விஜய்,
சாஹா..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’