வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

தனது உதிரத்தை விற்று தனது தோழர்களுக்கு உணவளித்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மேல் மாகாண அமைச்சர் ஹம்மன் பில


எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் கொலை முயற்சிகளுக்கும் இடையில் நேர்மையுடனும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் தனது மக்களுக்காகவும் இந்த நாட்டில் இன ஐக்கியத்துக்காகவும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் செயற்பட்டு வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என மேல்மாகாண விவசாய கைத்தொழில் சிறுநீர்ப்பாசன மற்றும் இயற்கை வள அமைச்சர் உதய பிரபாத் ஹம்மன் பில் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மேல்மாகாண கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி கொழும்பு தேசிய கலாபவனத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே மேல் மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் நாட்டில் இருந்த சமயம் தனது உதிரத்தை விற்றுத் தனது தோழர்களுக்கு உணவளித்தவர். எனவே இவ்வாறான ஒருவரை நாம் எமது அமைச்சராக கொண்டிருப்பதையிட்டு பெருமையடைகின்றோம்.
செயற்பாட்டுத் துடிப்புமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையின் கீழ் எமது நாட்டின் சம்பிரதாயக் கைத்தொழில்கள் நிச்சயம் முன்னேற்றம் காணும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய மேல்மாகாண ஆளுநர் அல்ஹாச் அலவி மௌலானா அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உதாரணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே எனத் தெரிவித்தார்.
மேல் மாகாண கைப்பணிப் பொருட்கள் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கண்காடசி இன்றும் நாளையும் நாளை மறுதினமும் என மூன்று நாட்கள் கொழும்பு - 07 தேசிய கலாபவனத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’